உலகின் முதல் காணொளிக் காட்சி..!!

உலகின் முதல் காணொலி காட்சியை காட்டியவர் எம்பெருமான் சிவன், எப்படி என்கிறீர்களா...??

கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் திருமணம். முனிவர்கள்,
சித்தர்கள், தேவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அப்போது வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது.என்ன பண்ணுவது?
இமயமலை உச்சியில் எல்லோரும் உட்கார்ந்திருக்கின்றார்கள். சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார். "அப்பனே வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. நீ பொதிகை மலைக்குப் போ" என்றார்.

அவர் அடியார். அவர். "அடிக்கடி நடக்கின்ற கல்யாணமா சுவாமி! இந்தப் பாவி இந்தக் கல்யாணத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே" என்றார். "நீ வருத்தப்படாதே; இந்தக் காட்சியை உனக்கு அங்கே தருகின்றேன்"என்றார்.

சிவபெருமானின் சொல்லிர்க்கிணங்க அகத்திய முனி தென்திசை நோக்கி பிரயாணப்பட்டார். பயணமாகும் வழியில் விந்திய மலை குறுக்கிட்டது. அகத்தியர், தான் தெற்கே சென்று வடக்கே திரும்பும் வரையில், விந்திய மலை தாழப் பதிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பின்னர் அகத்திய முனி அங்க சென்று பொதிகை மலையை அடைந்த பிற்ப்பாடே பூமி சமநிலைப் பெற்றது.

சிவபெருமானும் தான் தந்த வாக்கிற்க்கிணங்க திருமணக் கோலத்தில் உமையாளுடன் அகத்தியருக்கு காட்சியளித்தார். பின்பு அகத்தியரை தென்திசையிலேயே இருந்து தமிழுக்கு இலக்கணம் வடிக்கும்படி பணித்தார். அதற்கினங்க அகத்திய முனி முருகப் பெருமானே நோக்கி தவமிருக்க, முருகப் பெருமான் அவருக்கு காட்சியளித்து அருளியது தான் அவர் எழுதிய "அகத்தியம்" எனும் முதல் தமிழ் இலக்கண நூல்.

Comments