Skip to main content

நட்பென்னும் டெபாசிட்டை இழக்க எனக்கு தைரியமில்லையடி….

இப்போதெல்லாம் என் எதிரே வரும்
பெண்களைக் கூடக் கவனியாமல்,
நீ அனுப்பும் குறுஞ்செய்திகளை தான் என்
செல்லிடப் பேசியில் பார்த்துக் கொண்டே நடக்கிறேன்….
சில விளம்பரக் காட்சிகளில் ஒரு அழகான குழந்தையுடன்
சிரித்துக் கொண்டிருக்கும் தம்பதிகளைப் பார்க்கையில்,
நான் அந்த காட்சிகளில், நம்மைத் தான் உருவகப்படுத்திப் பார்க்கிறேன்..
என்னிடம் பைக் இல்லாத போதும்,
அடிக்கடி என் மனம் எனக்கு டாடா காட்டி
விட்டு உன்னுடன் பைக் ஏறிச் செல்கிறது..
நீ லேசாக உடம்பு சரியில்லை என்று சொன்னபோது, அந்த மாத்திரை சாப்பிடு, இந்த மருந்து
எடுத்துக்கோ என்று எம்.பி.பி.எஸ் படிக்காமலேயே டாக்டர் ஆகிறேன் நான்….
மனதிற்குள் தினமும் சாலமன் பாப்பையா வந்து ‘என் மனதில் உள்ளது நட்பா? காதலா?”
என்று பட்டிமன்றம் நடத்தி விட்டு தீர்ப்பை மட்டும் சொல்லாமல் செல்கிறார்…
இவ்வளவு நடந்தும் நான் ஏன் அமைதி கொள்கிறேன்,
உன்னுடைய மனதில் காதலன் பதவிக்கு போட்டியிட்டு
என்னுடைய நட்பென்னும் டெபாசிட்டை இழக்க எனக்கு தைரியமில்லையடி….

Comments