அவன் அவள் அது...
அவன் : "ஹலோ என்னடி பண்ற...??"
அவள் : "உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல.."
அவன் : "ஹே உன்ன பார்க்க வர முடியாததுக்கு sorry da செல்லம்.."
அவள் : "ஒன்னும் தேவை இல்ல.. உனக்கு என்ன விட உன் EXAM தான் முக்கியமா போச்சில்ல....??"
அவன் : "ஆயிரம் தடவ sorry... போதுமா...???"
அவள் : "போதாது.."
அவன் : "சரி நீ என்ன சொன்னாலும் செய்யுறேன்.... போதுமா..??"
அவள் : "promise....???"
அவன் : "promise..."
அவள் : "அப்ப 2 days நீ என்ன மட்டும் தான் நெனைச்சுட்டு இருக்கணும்... இதன் உனக்கு punishment..."
அவன் : "இந்த punishment'a தான் நான் தினமும் ஏத்துக்குரேனே...."
அவள் : "எனக்கு அதெல்லாம் தெரியாது... 2days நான் எப்ப கூப்ட்டாலும் என்ட I LOVE U சொல்லணும்... exam அது இது'னு எந்த reason'um சொல்ல கூடாது.."
அவன் : "கண்டிப்பாடா செல்லம்.. உனக்காக இது கூட பண்ண மாட்டேனா.."
அவள் : "ம் ok... எங்கப்பா வர மாதிரி இருக்கு நான் வைக்குறேன்... bye..."
காட்சி 2
அவள் : " ஹே வித்யா..."
வித்யா : " ஹாய் டி...."
அவள் : "என்ன இந்த பக்கம்...??"
வித்யா : "சும்மா தாண்டி வந்தேன்... உன் plan என்னாச்சு....???
அவள் : "sucess..."
வித்யா : "நெஜமா...???"
அவள் : "ஆமடி.. அவன் என்ன முழுசா லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்..."
வித்யா : "பார்த்த பாவமா இருக்குடி.."
அவள் : "இதுல பாவம் புண்ணியம் பார்க்க முடியாதுடி... போன வருஷம் Class topper'a இருந்த என்ன இரண்டாவதா ஆக்குனான்ல.. அப்ப நான் பாவம் இல்லையா...?? எவ்ளோ வருத்த பட்டுருப்பேன்... அதுக்கு பழி வாங்க தாண்டி அவன காதலிக்குற மாதிரி நடிச்சு அவன ஒரு subject'layum பாஸ் பண்ணாம செய்ய போறேன்...."
வித்யா : "ஆனாலும்..."
அவள் : "தயவு செய்து இதுல தலையிடாத..."
Comments
Post a Comment