Posts

கருணைக்கு அருணகிரிநாதர்

வக்கபாகை எனும் ஊரில் வாழ்ந்து வந்த வில்லிபுத்தூரார் என்ற பெரும் புலவர், பல புலவர்களிடம் புலமை போட்டியில் ஈடுபட்டு வந்தார். போட்டியின் போது, வில்லிபுத்தூரார் கைகளில் துரட்டு ஒன்று வைத்திருப்பார். அந்த துரட்டு, போட்டிக்கு வந்த புலவரின் காதில் மாட்டப்பட்டிருக்கும். வில்லிபுத்தூரார் கேட்கும் கேள்விகளுக்கு புலவர் பதில் கூற வேண்டும், தவறினால், தமது கைகளில் உள்ள துரட்டினை இழுத்து காதுகளை அரிந்து விடுவார். இந்த போட்டியில், பல புலவர்கள் வில்லிபுத்தூராரை வெல்ல இயலாமல் தமது காதுகளை இழந்தனர். இதை அறிந்த அருணகிரிநாதர், இந்த கொடுமையை தடுக்க எண்ணி வில்லிபுத்தூராரிடம் சென்று, போட்டியில் ஈடுபட்டார். அப்போது அருணகிரிநாதர் தமது கைகளிலும் துரட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும், தாம் பாடும் அந்தாதி ஒன்றிற்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூறினால், தாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தமது காதுகளை வில்லிபுத்தூரார் அரியலாம் என்றும், தவறினால் வில்லிபுத்தூராரின் காதுகளை, தமது துரட்டினால் அரிய நேரிடும் என்றும் நிபந்தனை விதித்தார். வில்லிபுத்தூராரும் அதற்கு ஒப்புக் கொண்டார். இருவரது கைகளிலும் துரட்டு வழங்கப்பட்டு, எதி...

உலகின் முதல் காணொளிக் காட்சி..!!

Image
உலகின் முதல் காணொலி காட்சியை காட்டியவர் எம்பெருமான் சிவன், எப்படி என்கிறீர்களா...?? கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் திருமணம். முனிவர்கள், சித்தர்...

மீண்டும் ப்ளாகர் அவதாரம்..!!

ப்ளாக் எழுதி பல மாமாங்கம் ஆகிவிட்டது. கிட்டதட்ட மூணு வருடம். எழுத தோனலனு இல்ல, ப்ளாக் இருக்குறதையே மறந்துவிட்டேன், அதான் உண்மை. எப்பவோ புத்தகத்து நடுவில் சேர்த்து வ...

அவன் அவள் அது...

அவன் : " ஹலோ என்னடி பண்ற...??" அவள் : "உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல.." அவன் : "ஹே உன்ன பார்க்க வர முடியாததுக்கு sorry da செல்லம்.." அவள் : "ஒன்னும் தேவை இல்ல.. உனக்கு என்ன விட உன் EXAM தான் முக்கியமா போச்சில்ல....??" அவன் : "ஆயிரம் தடவ sorry... போதுமா...???" அவள் : "போதாது.." அவன் : "சரி நீ என்ன சொன்னாலும் செய்யுறேன்.... போதுமா..??" அவள் : "promise....???" அவன் : "promise..." அவள் : "அப்ப 2 days நீ என்ன மட்டும் தான் நெனைச்சுட்டு இருக்கணும்... இதன் உனக்கு punishment..." அவன் : "இந்த punishment'a தான் நான் தினமும் ஏத்துக்குரேனே...." அவள் : "எனக்கு அதெல்லாம் தெரியாது... 2days நான் எப்ப கூப்ட்டாலும் என்ட I LOVE U சொல்லணும்... exam அது இது'னு எந்த reason'um சொல்ல கூடாது.." அவன் : "கண்டிப்பாடா செல்லம்.. உனக்காக இது கூட பண்ண மாட்டேனா.." அவள் : "ம் ok... எங்கப்பா வர மாதிரி இருக்கு நான் வைக்குறேன்... bye..." காட்சி 2 அவள் : " ஹே வி...

நட்பென்னும் டெபாசிட்டை இழக்க எனக்கு தைரியமில்லையடி….

நட்பென்னும் டெபாசிட்டை இழக்க எனக்கு தைரியமில்லையடி…. இப்போதெல்லாம் என் எதிரே வரும் பெண்களைக் கூடக் கவனியாமல், நீ அனுப்பும் குறுஞ்செய்திகளை தான் என் செல்லிடப் பேசியில் பார்த்துக் கொண்டே நடக்கிறேன்…. சில விளம்பரக் காட்சிகளில் ஒரு அழகான குழந்தையுடன் சிரித்துக் கொண்டிருக்கும் தம்பதிகளைப் பார்க்கையில், நான் அந்த காட்சிகளில், நம்மைத் தான் உருவகப்படுத்திப் பார்க்கிறேன்.. என்னிடம் பைக் இல்லாத போதும், அடிக்கடி என் மனம் எனக்கு டாடா காட்டி விட்டு உன்னுடன் பைக் ஏறிச் செல்கிறது.. நீ லேசாக உடம்பு சரியில்லை என்று சொன்னபோது, அந்த மாத்திரை சாப்பிடு, இந்த மருந்து எடுத்துக்கோ என்று எம்.பி.பி.எஸ் படிக்காமலேயே டாக்டர் ஆகிறேன் நான்…. மனதிற்குள் தினமும் சாலமன் பாப்பையா வந்து ‘என் மனதில் உள்ளது நட்பா? காதலா?” என்று பட்டிமன்றம் நடத்தி விட்டு தீர்ப்பை மட்டும் சொல்லாமல் செல்கிறார்… இவ்வளவு நடந்தும் நான் ஏன் அமைதி கொள்கிறேன், உன்னுடைய மனதில் காதலன் பதவிக்கு போட்டியிட்டு என்னுடைய நட்பென்னும் டெபாசிட்டை இழக்க எனக்கு தைரியமில்லையடி….

ஆரம்பமே சோகம்.

வணக்கம் நண்பர்களே... எல்லாரும் என்கிட்ட கேட்டாங்க என்னடா ஆரம்பமே எதோ சோகமா வாசமில்லா மலர் இதுன்னு ஆரம்பிக்குறியே... இதெல்லாம் வெளங்குமான்னு...